Tamilசெய்திகள்

நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும் – காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே

டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டி கூட்டம் இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டம் தொடங்கியதும் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பேசினார். அப்போது அவர் பேசுகையில் “இந்திய கூட்டணி கட்சிகள் ஒரு அணியாகச் செயல்பட்டன. விடாமுயற்சி, உறுதியுடன் எந்த எதிரியையும் எங்களால் தோற்கடிக்க முடியும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர், கிராமப்புறங்களில் காங்கிரஸ் இடங்களை பிடித்தது. ஆனால் நகர்ப்புற வாக்காளர்கள் மத்தியில் தாக்கத்தை உருவாக்க உழைக்க வேண்டும். மக்களை தேர்தலில் காங்கிரசின் மீது நம்பிக்கை வைத்து சர்வாதிகார, அரசியலமைப்பு எதிர்ப்பு சக்திகளுக்கு மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர்” கார்கே தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவராக தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. சசி தரூர், டி.கே. சிவக்குமார் உள்ளி்ட்ட தலைவர்கள் ராகுல் காந்திக்கு ஆதரவான கருத்தை தெரிவித்துள்ளனர்.