நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் இடங்களில் 19 ஆம் தேதி பொது விடுமுறை – தமிழக அரசு அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது.
1,374 மாநகராட்சி கவுன்சிலர், 3,843 நகராட்சி கவுன்சிலர், 7,621 பேரூராட்சி கவுன்சிலர்கள் என மொத்தம் 12,838 பதவி இடங்களுக்கு இந்த தேர்தல் நடக்கிறது. தி.மு.க. கூட்டணிக்கும், அ.தி.மு.க. கூட்டணிக்கும் இடையே இந்த தேர்தலில் நேரடி மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் வரும் 19-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்குப்பதிவு நாளன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.