Tamilசெய்திகள்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான அதிமுக-வின் இறுதி வேட்பாளர் பட்டியல் – ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இணைந்து வெளியிட்டனர்

அதிமுக தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாகவது:-

மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்  ஆகிய பதவிகளுக்கான ஆகிய பதவிகளுக்கான பதவிகளுக்கான அதிமுக வேட்பாளர்கள் – இறுதிப்பட்டியல்

தமிழ்நாட்டில், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 19.02.2022 அன்று  நடைபெற உள்ளதையொட்டி, மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர், நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அதிமுக அதிகாரப்பூர்வ வேட்பாளர்களாக, மாவட்டம் வாரியாக கீழ்க்கண்டவர்கள்,  கீழ்க்காணும் வார்டுகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள் என்பதைத்  தெரிவித்துக் கொள்கிறோம்.

சென்னை மாநகராட்சி வார்டு உறுப்பினர்களுக்கான 198 பேர் கொண்ட பட்டியலை வெளியிட்டுள்ளது. அதேபோல், திருப்பூர் மாநகராட்சி, காங்கேயம் நகராட்சி, வெள்ளக்கோவில் நகராட்சி, மேட்டுப்பாளையம் நகராட்சி, காரமடை நகராட்சி, கூடலூர் நகராட்சி, திருமுருகன்பூண்டி நகராட்சி, குன்றத்தூர் நகராட்சி, புதுக்கோட்டை நகராட்சி, அறந்தாங்கி நகராட்சி, திருமங்கலம் நகராட்சி, உசிலம்பட்டி நகராட்சி, குழித்துறை நகராட்சி, பத்மநாபபுரம் நகராட்சி, கொல்லங்கோடு நகராட்சி ஆகிய வார்டு உறுப்பினர்களுக்கான பட்டியலை வெளியிடப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக நிர்வாகிகளும், அதிமுக உடன்பிறப்புகளும்  இணைந்து, அதிமுகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில்,  சிறந்த முறையில் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.

மேலும், அதிமுக வேட்பாளர்கள் போட்டியிடும் மாநகராட்சி மன்ற வார்டு உறுப்பினர்,  நகராட்சி மன்ற வார்டு உறுப்பினர் பதவி இடங்கள் தவிர, மற்ற வார்டுகள் தமிழ் மாநில  காங்கிரஸ், புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், சமூக சமத்துவப் படை, பார ய பார்வர்டு பிள பாரதிய பார்வர்டு பிளாக்  ஆகிய கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. தோழமைக் கட்சிகளின் சார்பில் போட்டியிடும்  வேட்பாளர்கள், அதிமுக சின்னமான இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவார்கள்.  மேலும், தோழமைக் கட்சிகளின் வேட்பாளர்கள் வெற்றி பெற்றிடும் வகையில்,  அதிமுக நிர்வாகிகளும், அதிமுக உடன்பிறப்புகளும் தேர்தல் பணிகளை ஆற்றிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.