நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கும் வழக்கு – உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழகத்தில் கொரோனா பாதிப்புகள் அதிகரித்து வருவதால், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை தள்ளி வைக்கக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஊரக உள்ளாட்சி தேர்தலின்போது கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகள் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் கடைப்பிடிக்கப்படும் என்றும், கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி தேர்தல் நடத்தப்படும் எனறும் மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்தது. இதையடுத்து வழக்கு விசாரணை திங்கட்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கான ஆயத்தப் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், தேர்தல் தேதி தொடர்பாக மாநில தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிப்பாணை வெளியிட உள்ளது.