தோல்வி பயத்தால் எதிர்க்கட்சிகள் கலாட்டா செய்கிறார்கள் – துரைமுருகன் புகார்

வேலூர் மாநகராட்சி காட்பாடி டான் போஸ்கோ பள்ளி வாக்குசாவடியில் அமைச்சர் துரைமுருகன், அவரது மகன் கதிர் ஆனந்த் எம்.பி வாக்களித்தனர். அப்போது துரைமுருகன் அளித்த பேட்டியில் கூறியதாவது:-

தமிழகத்தில் நடைபெறும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது.

இந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி பயத்தால் கலாட்டாவில் ஈடுபட்டு வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சிகளில் முக்கிய பொறுப்புகளை தி.மு.க. கைப்பற்றும்.

முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. புதிய அணை கட்டுவது வி‌ஷமத்தனமானது.

முல்லை பெரியாறில் கேரளா அணை கட்டுவோம் எனக்கூறுவது ஜனநாயகத்திற்கு எதிரானது. அதை தடுக்க தி.மு.க. அரசு உறுதியாக உள்ளது.

இஸ்லாமியர்கள், இந்துக்கள் பற்றி நான் தவறாக எதுவும் பேசவில்லை. அப்படி நான் பேசியதாக நிரூபிக்கப்பட்டால் பகிரங்க மன்னிப்பு கேட்பேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools