சிம்பு நடிப்பில் வெளியான ’போடா போடி’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் இயக்குனர் விக்னேஷ் சிவன். அதன்பிறகு நானும் ரவுடி தான், தானா சேர்ந்த கூட்டம் போன்ற படங்களை இயக்கினார். இவர் தற்போது காத்துவாக்குல் ரெண்டு காதல் என்ற படத்தை நடிகர் விஜய் சேதுபதியை வைத்து இயக்கி வருகிறார். இதற்கிடையில் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் சேர்ந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் மூலம் பல படங்களை தயாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் விக்னேஷ் சிவன் சமூக வலைத்தளத்தில் பதிவிட்ட ஒரு புகைப்படம் அனைவரையும் முணுமுணுக்க வைத்துள்ளது. இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிவிட்டு அதில் சில விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் ”எனது முன்மாதிரியாக திகழும் ஒரு நபரை நான் சந்தித்தபோது எப்படி உணர்ந்தேன் என்று ஒரு தலைப்பு மூலம் என்னால் விளக்கிட முடியாது. என் அடையாளம், என் நாயகன். நான் அவரைச் சந்தித்து, “ஆக்ஷன்” சொல்லி, அவரை இயக்குவது பற்றிய ஒரு நல்ல கதை விரைவில் வரும்” என்று பதிவிட்டிருக்கிறார்.
இதன் மூலம் இயக்குனர் விக்னேஷ் சிவன், தோனியை வைத்து பட இயக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது, இது குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கபடுகிறது.