தமிழக தலைமை செயலாளர் கே.சண்முகம் வெளியிட்ட அரசாணையில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு தொடர்பான ஊரடங்கு 17-ந் தேதி(இன்று) வரை பிறப்பிக்கப்பட்டுள்ளது. தற்போது பிறப்பிக்கப்பட்டுள்ள அரசு உத்தரவில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி தொழிற்சாலைகள் இயக்கம் தொடர்பான உத்தரவில் திருத்தங்கள் செய்யப்படுகிறது. அதைத்தொடர்ந்து நகர்புறங்களில் உள்ள ஜவுளி தொழிற் சாலைகள் உள்ளிட்ட அனைத்து தொழிற்சாலைகளும் (சென்னை தவிர) 50 சதவீத ஊழியர்களுடன் இயங்கலாம்.
அனைத்து கிராமங்கள் மற்றும் பேரூராட்சிகளில் அனைத்து தொழில் நடவடிக்கைகளையும் அனுமதிக்கலாம். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதி திட்டத்தில் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள 33 சதவீத தொழிலாளர் எண்ணிக்கையை 50 சதவீதமாக உயர்த்தலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.