தொல்.திருமாவளவன் இளையராஜாவை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்

இசைஞானி இளையராஜாவின் மகள் பாடகி பவதாரிணி புற்றுநோய் பாதிப்பால் கடந்த 25-ம் தேதி உயிரிழந்தார். பவதாரிணி மறைவு திரையுலகத்தில் சோகத்தை ஏற்படுத்தியது. அவரது உடல் சொந்த ஊரான தேனியில் அடக்கம் செய்யப்பட்டது.

பவதாரிணி மறைவுக்கு திரையுலகினர், அரசியல் கட்சியை சேர்ந்த பிரமுகர்கள் இரங்கல் மற்றும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், விசிக தலைவர் திருமாவளவன் இசைஞானி இளையராஜா வீட்டிற்கு நேரில் சென்று பவதாரிணியின் திருஉருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தினார். பிறகு, இளையராஜாவை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools