சசிகலா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-
விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான அன்பு சகோதரர் தொல்.திருமாவளவனுக்கு என் இதயம் கனிந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்களை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
அன்பு சகோதரர் திருமாவளவன் தனது 60-வது பிறந்த நாளை கொண்டாடும் இவ்வேளையில் அவரின் மக்கள் பணி, சமூகப் பயணம் தொடர்ந்து தமிழ் மண்ணிற்கு ஆற்றிடவும், நீண்ட ஆயுளோடும், நல்ல சுகத்தோடும், என்றென்றும் மகிழ்ச்சியோடு வாழ்ந்திடவும் எல்லாம் வல்ல ஆண்டவனை வேண்டுகிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.