தொடரை வெல்வதே நோக்கம் – வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஹெய்டன் வால்ஷ்

இந்தியா – வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் திருவனந்தபுரத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணியை 170 ரன்களுக்குள் கட்டுப்படுத்தியது வெஸ்ட் இண்டீஸ். அதற்கு அந்த அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹெய்டன் வால்ஷ் முக்கிய காரணம்.

அதிரடியாக விளையாடிய ஷிவம் டுபே மற்றும் ஷ்ரேயாஸ் அய்யர் ஆகியோரை வீழ்த்தினார் வால்ஷ். 2-வது போட்டியில் வெற்றி பெற்ற உற்சாகத்தில் இருக்கும் அவர், தொடரை வெல்வதுதான் முக்கிய இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஹெய்டன் வால்ஷ் கூறுகையில் ‘‘முக்கியமான நோக்கமே தொடரை வெல்ல வேண்டும் என்பதுதான்… எல்லாமே சரியாக அமைந்து அணிக்கு வெற்றியை தேடிக்கொடுக்க வேண்டும்.

திருவனந்தபுரத்தில் நடைபெற்ற போட்டியில் பனியின் தாக்கம் அதிகமாக இருந்ததாக நினைக்கவில்லை. நாங்கள் வலுவான பந்து வீச்சு அணி, ஒருமுறை சிறப்பாக பந்து வீசினால் எதிரணியை குறைந்த ரன்னுக்குள் கட்டுப்படுத்த முடியும் என்பதை தெரிந்திருந்தோம்’’ என்றார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news