X

தொடரும் மழை – 7 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை வலுவாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பெரும்பாலான மாவட்டங்களில் அதாவது 17 மாவட்டங்களில் கனமழை பதிவாகி உள்ளது. 3 மாவட்டங்களில் மிக கனமழை பதிவாகி உள்ளது. டிசம்பர் 3 மற்றும் 4 ஆகிய நாட்களில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒருசில இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடலூர், அரியலூர், பெரம்பலூர், தேனி, திண்டுக்கல், நீலகிரி, கோவை மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் கனமழையால் பெரம்பலூர், அரியலூர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடலுர், சிதம்பரம், வடலூர் கல்விமாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விருதாசலம் கல்வி மாவட்டத்தில் பள்ளிகள் தொடர்ந்து செயல்படும் எனவும் ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தூத்துக்குடி திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மழையால் தமிழகத்தில் 7 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை, பெரம்பாலூர், சேலம், நெல்லை உள்பட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் புதுக்கோட்டையில் ஆலங்குடி, கறம்பக்குடி, அறந்தாங்கி, மீமிசல் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.

சென்னையில் சோழிங்கநல்லூர், துரைப்பபாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. செங்கல்பட்டு பெருங்களத்தூர், வண்டலுரிலும் கனமழை பெய்து வருகிறது.

Tags: south news