X

தேவையில்லாத ஷாட் – கோலியை விமர்சித்த கவுதம் கம்பீர்

ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் நேற்று முன் தினம் மோதின. முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி 147 ரன்னில் அவுட் ஆனது. இதனையடுத்து களமிறங்கியது இந்திய அணி கடைசி ஓவரில் வெற்றி பெற்றது. ஆட்ட நாயகனாக ஹர்த்திக் பாண்ட்யா தேர்வு செய்யப்பட்டார்.

இந்நிலையில் விராட் கோலியின் பேட்டிங் குறித்து இந்திய அணியின் முன்னாள் தொடக்க வீரர் கவுதம் கம்பீர் கேள்வி எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:-

ரோகித் ஷர்மாவின் விக்கெட் விழுந்தவுடன் அடுத்த ஓவரிலேயே அவுட் ஆனதால் கோலி மிகவும் ஏமாற்றமடைந்திருப்பார். ஏனென்றால் ரோகித் அவுட் ஆனவுடன் அப்படி ஒரு ஷாட்டை கோலி ஆடியிருக்க தேவையில்லை. ஒரு நல்ல இளம் வீரர் கூட அந்த ஷாட்டை ஆடியிருக்கமாட்டார். அப்படி இளம் வீரர் ஒருவர் அந்த மாதிரியான ஷாட்டை விளையாடியிருந்தால் நிறைய விமர்சனத்திற்கு உள்ளாகியிருப்பார்.

சர்வதேச கிரிக்கெட்டில் அவர் அடித்த ரன்களின் எண்ணிக்கை எனக்குத் தெரியும், இந்த ஷாட்டைப் பார்க்கும்போது அந்த ஷாட் தேவையில்லை என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்வார். நீங்கள் 34 பந்துகளில் விளையாடி 35 ரன்கள் எடுத்தீர்கள். உங்கள் கேப்டன் இப்போதுதான் அவுட் ஆனார். உங்கள் இன்னிங்ஸை இன்னும் கொஞ்சம் விஷயங்கள் எளிதாகி இருக்கலாம்.

என்று அவர் கூறினார்.