தேவையானி நடிக்கும் ‘முத்தாரம்’ சீரியல்
மூன் தொலைக்காட்சியில் இருவேடங்களில் நடிக்கும் தேவையானியின் நெடுந்தொடர் ‘முத்தாரம்’ திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு ஒளிபரப்பாகிறது.
ஒற்ற உருவம் கொண்ட இரு சகோதரிகள்அதில் ஒருவர் அப்பாவியான பெண், மற்றொருவறோ கம்பீரமிக்க காவல்துறை அதிகாரி, காவல் அதிகாரி நேர்மை தவராது தன் கடமையை செய்பவர் ஆகையாலே அவருக்கு எதிரிகள் அதிகம், அது மட்டுமல்லாமல் சக காவல் பெண் அதிகாரிக்கு இவர் மேல் வெறுப்பு இதையெல்லாம் இவர் எப்படி எதிர்கொள்கிறார், இவ்வற்றோடு சேர்ந்து குடும்பத்தில் நடக்கும் பிரச்சைனைகளை தீர்த்துவைக்குறார், இவரின் நேர்மையினால் சகோதரிகள் வாழ்வில் என்ன நிகழ்கிறது என பல்வேறு கோணங்களில் விறுவிறுப்பான கதைகளம் கொண்ட நெடுந்தொடர் ‘முத்தாரம்’ . நேர்மையான காவல் அதிகாரி, வெகுளியான பெண் என தேவையானி இருவேடங்களில் நடித்துள்ளார். நவீன கால பெண்களுக்கு முன்னுதாரனமாக தேவையானி அவர்களின் காதாபாத்திரம் அமைந்துள்ளதால் பெண்களிடையே இந்நெடுந்தொடர் பெரும் வரவேற்ப்பு பெற்றுள்ளது, பரபரப்பான திருப்பங்கள் நிறைந்த இந்நெடுந்தோடர் திங்கள் முதல் சனி வரை இரவு 8:00 மணிக்கு மூன் டிவியில் ஒளிபரப்பாகிறது.