தேவாலய மேற்கூரை இடிந்து விழுந்ததில் 10 பேர் பலி

மெக்சிகோ நாட்டின் வடக்கே உள்ள டமாலிபாஸ் பகுதியில் உள்ள மெக்சிகோ வளைகுடாவின் கடற்கரையோர நகரம், சியுடாட் மடேரோ. இங்கு சுமார் 2 லட்சம் பேர் வசிக்கின்றனர்.

நேற்று முன் தினம் ஞாயிற்றுக்கிழமை என்பதால் சுமார் 80 பேருக்கும் மேற்பட்ட கிறித்துவ மக்கள் அங்குள்ள சாண்டா க்ரூஸ் தேவாலயத்தில் வழிபாட்டிற்காக கூடியிருந்தனர். அங்கு ஞானஸ்னானம் எனும் கிறித்துவ மத சடங்கு நடைபெற்று கொண்டிருக்கிறது. அப்போது எதிர்பாரதவிதமாக அந்த தேவாலயத்தின் மேற்கூரை இடிந்து கீழே விருந்தது. இதில் 10 பேர் உயிரிழந்தனர். 6.-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர்.

இறந்த 10 பேரில் 5 பேர் பெண்கள், 2 பேர் ஆண்கள் மற்றும் 3 பேர் குழந்தைகள். காயமடைந்த 60 பேரில் 23 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களில் 2 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.

இடிபாடுகளுக்குகிடையே 80 பேர் இன்னமும் சிக்கி உள்ளதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க காவல்துறை மற்றும் சமூக சேவை அமைப்புகளுடன் இணைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் டமாலிபாஸ் கவர்னர் அமெரிக்கா வில்லாரியல் தனது எக்ஸ் கணக்கில் பதிவிட்டுள்ளார்.

மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ தேவைப்படும் ஹைட்ராலிக் லிஃப்ட், மரங்கள், சுட்டி உட்பட பல உபகரணங்களை நண்டு உதவ கோரி சமூக வலைதளங்களில் அப்பகுதி மக்கள் பதிவிட்டு வருகின்ற்னர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil news