X

தேர் பவனி விபத்து – தஞ்சை செல்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சாவூரில் களிமேடு பகுதியில் உள்ள அப்பர் கோவிலில் சித்திரை திருவிழா நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக நேற்று இரவு தேர் பவனி நடைபெற்றது. தேர் மீது மின்சார கம்பி உராய்ந்ததில்
மின்சாரம் பாய்ந்தது. இதில் பலர் தூக்கி வீசப்பட்டனர்.

தகவலறிந்து அங்கு வந்த தீயணைப்பு படையினர் போராடி தீப்பற்றி எரிந்த தேரை போராடி அணைத்தனர். இதில் தேர் முற்றிலும் எரிந்து போனது.

இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 11 பேர் பரிதாபமாக பலியாகினர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்களை மீட்டு தஞ்சாவூர் மருத்துவமனைக்கு அனுப்பி
வைத்துள்ளனர்.

இந்நிலையில், தேர் திருவிழா விபத்து நடந்த தஞ்சை களிமேடு கிராமத்துக்கு இன்று காலை 11 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். விபத்தில் உயிரிழந்தவர்களின்
குடும்பத்தாரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 11.30 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்று அங்கிருந்து தஞ்சை செல்ல இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

தேர் விபத்து நடந்த தஞ்சை களிமேடு கிராமத்துக்கு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் செல்ல இருப்பதாகவும் கூறப்படுகிறது.