Tamilசெய்திகள்

தேர்வு முறைகேடுகளை தடுக்க டி.என்.பி.எஸ்.சி புதிய முயற்சி!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலம் அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்கள் எழுத்து, நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட்டு வருகிறது. இந்த தேர்வுகளில் முறைகேடு புகார் எழுந்தது. இதுதொடர்பாக சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணை நடத்தி முறைகேட்டில் ஈடுபட்ட தேர்வர்கள், இடைத்தரர்களை கைது செய்தனர்.

இதையடுத்து இனி நடைபெற உள்ள அனைத்து தேர்வுகளும் புதிய சீர்திருத்தங்களுடன் சிறப்பாக நடத்தப்படும் என்றும், தேர்வர்கள் அச்சம் அடைய தேவையில்லை என்றும் டி.என்.பி.எஸ்.சி. தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் தேர்வர்கள் தங்களுடைய குறைகள் மற்றும் புகார்களை நேரடியாக தங்களிடம் தெரிவிக்கும் வகையில் செல்போன் செயலி ஒன்றை உருவாக்க டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் திட்டமிட்டு உள்ளது.

இதற்கான டெண்டர் அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி. நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதில் ‘தேர்வர்கள் குறைகள், புகார்களை தேர்வாணையத்துக்கு தெரிவிக்க அனைத்து வகை செல்போன்களிலும் பதிவிறக்கம் செய்யும் வகையில் செல்போன் செயலியை உருவாக்க தகுதியுடைய நிறுவனங்கள் அடுத்த மாதம் (ஜூன்) 22-ந்தேதிக்குள் ஒப்பந்த புள்ளிகளை சமர்ப்பிக்கலாம்’ என்று தெரிவித்து இருக்கிறது. அதற்கான விதிமுறைகள், நிபந்தனைகள் தேர்வாணையத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *