தேர்தல் வந்தாலே திமுக-வுக்கு ஜுரம் வந்துவிடும் – அமைச்சர் ஜெயக்குமார் தாக்கு

சுனாமி பேரலையில் உயிரிழந்தவர்களின் 15-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் அமைச்சர் ஜெயக்குமார் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார். சுனாமி நினைவு கல்வெட்டினையும் திறந்து வைத்தார். பின்னர் படகில் கடலுக்குள் சென்று மலர் தூவினார்.

அப்போது அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-

மத்திய அரசிடம் இருந்து மாநிலத்துக்கு தேவையான நிதியை பெற்று மக்களுக்கு சேவை செய்து வருவது அ.தி.மு.க. அரசுதான்.

மற்ற மாநிலங்களை விட மத்திய அரசிடம் இருந்து நிதி பெறுவதில் தமிழகம் முன்னோடி மாநிலமாக இருக்கிறது.

மத்தியிலும் மாநிலத்திலும் 13 ஆண்டுகளாக காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணியில் இருந்தது. ஆனால் மக்களுக்கு ஒரு திட்டமும் செயல்படுத்தவில்லை.

தேர்தல் வந்தாலே தி.மு.க.வுக்கு பயத்தில் ஜூரம் வந்துவிடும். மக்களை ஏமாற்றி ஓட்டு வாங்கி பட்டை நாமமும் போடுவது தி.மு.க. தான்.

மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சொத்துக்கள் தனக்கே சொந்தம் என சசிகலா கூறியது பற்றி கேட்கிறீர்கள்… சொத்துக்குவிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. அதுபற்றி கருத்து கூற முடியாது.

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை பெற்று தருவதே எங்களுடையே நோக்கம்.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news