X

தேர்தல் முடிவுகள் – கோவில்களில் சிறப்பு பிரார்த்தனை செய்யும் பா.ஜ.க-வினர்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்படுகிறது. இதனால் இந்தியாவின் அடுத்த பிரதமர் யார்? என்ற உச்சக்கட்ட பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இன்று காலை 8 மணிக்கு வாக்குகள் எண்ணப்படுகிறது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படுகிறது. காலை 11 மணி அளவில் முன்னணி நிலவரங்கள் தெரியவரும்.

இந்நிலையில், பா.ஜ.க வேட்பாளர்களும், நிர்வாகிகளும் சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டு உள்ளனர். உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூரில் பாஜக எம்பியும், வேட்பாளருமான ரவி கிஷன் பஞ்சமுகி அனுமான் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

பா.ஜ.க. வேட்பாளர் பன்சூரி ஸ்வராஜ் டெல்லியில் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி நாராயண் கோவிலில் பிரார்த்தனையில் ஈடுபட்டார்.

கௌரி சங்கர் கோவிலில் சாந்தினி சௌக் தொகுதி பாஜக வேட்பாளர் பிரவீன் கண்டேல்வால் பிரார்த்தனை செய்தார்.