தேர்தல் பத்திர ஊழலை திசை திருப்ப பா.ஜ.க கச்சத்தீவை கையில் எடுத்துள்ளது – திமுக பதிலடி
கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக மத்திய வெளியுறவு துறை மந்திரி ஜெய்சங்கர் தெரிவித்த கருத்துக்கு தி.மு.க. பதிலடி கொடுத்துள்ளது. தி.மு.க. செய்தி தொடர்பாளர் சரவணன் கூறியதாவது:-
கடந்த 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த நீங்கள் (பாரதிய ஜனதா) என்ன செய்தீர்கள். கடந்த 10 ஆண்டுகளில் பா.ஜனதா அரசு கச்சத்தீவை மீட்பதற்கு எதுவும் செய்யவில்லை. பா.ஜ.க. இப்போது ஏன் இப்படி செய்கிறது. நாடு முழுவதும் 150 இடங்களைதான் வெல்ல முடியும் என்பது அவர்களுக்கு தெரியும். தேர்தல் பத்திர ஊழலில் இருந்து திசை திருப்பும் பிரச்சனைகளை அவர்கள் கையில் எடுக்க விரும்புகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.