தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் – காங்கிரஸ் வரவேற்பு

சட்டமன்றம் மற்றும் மக்களவை தேர்தலில் வாக்களிப்பதற்கு EVMs இயந்திரம் பயன்படுத்தப்படுகிறது. இந்த இயந்திரம் மூலம் வாக்குப்பதிவு செய்யும்போது யாருக்கு வாக்களித்தோம் என்பது தெரியாது. இதனால் யாருக்கு வாக்களித்தோம் என்பதை தெரிந்து கொள்ள விவிபாட் (Voter Verifiable Paper Audit Trail) இயந்திரம் செயல்படுத்தப்பட்டது.

வாக்களிக்கும் ஒரு நபர் எந்த சின்னத்திற்கு வாக்களித்தார் என்பதை ஒரு ரசீது மூலம் இந்த இயந்திரம் காட்டும். ஆனால் இந்த இயந்திரம் காட்டப்படும் ரசீது வாக்காளர்களுக்கு காட்டப்பட்ட பின் அவர்களிடம் வழங்கப்படாது. ஒரு பாக்ஸில் சேகரிக்கப்படும். தேவைப்பட்டால் இந்த ரசீதுகள் ஒரு தொகுதிக்கு ஐந்து வாக்குச்சாவடிகள் என்ற அடிப்படையில் ரேண்டம் முறையில் எண்ணப்படும்.

ஆனால், இந்த வாக்குகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என காங்கிரஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆனால் ஏவிஎம் இயந்திரம் 100% நம்பகத்தன்மை கொண்டது. அதனால் 100 சதவீதம் எண்ணப்பட வேண்டியதில்லை என தேர்தல் ஆணைய தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில் சமூக ஆர்வலர் ஒருவர் விவிபாட் இயந்திரம் மூலம் பெறப்படும் ரசீதுகள் அனைத்தும் எண்ணப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார். இந்த வழக்கு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் தெரிவித்திருந்தது. நேற்று இந்த வழக்கு நீதிபதிகள் பி.ஆர். கோவாய் மற்றும் சந்தீப் மேக்தா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது இது தொடர்பாக தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என கூறி விசாரணையை மே 17-ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் கூறுகையில் “இது தொடர்பாக இந்தியா கூட்டணி தொடர்ந்து தேர்தல் ஆணையத்தை சந்தித்து வலியுறுத்த நேரம் கேட்டது. ஆனால் தேர்தல் ஆணையம் தொடர்ந்து மறுப்பு தெரிவித்த நிலையில் இது தொடர்பாக உச்சநீதிமன்றம் தற்போது நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது முக்கியமான முதல்படி. தேர்தலுக்கு முன்னதாக இது தொடர்பான முடிவு எடுக்கப்பட்டால் அது பயனுள்ளதாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools