தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம் – அமைச்சர் ஜெயக்குமார்

தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம், என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார். இது குறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசியதாவது:

கடந்த பாராளுமன்ற தேர்தலில் வென்றதை போல் தற்போது எல்லா இடங்களிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். யார்? யாருடன் கூட்டணி என்பது குறித்து உரிய தருணத்தில் அறிவிப்போம். இப்போதைக்கு எங்களின் கூட்டணி கதவுகள் திறந்து வைக்கப்பட்டுள்ளது. யாரை சேர்த்து கொள்வது? யார் தேவையில்லை என்பதை கட்சி தான் முடிவு செய்யும்.

கூட்டணிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். அவர்கள் மக்கள் நலனுக்கு உகந்தவர்களா? மக்கள் முன்னேற்றத்திற்காக, தமிழக உரிமைகளுக்காக அரசின் திட்டங்களுக்கு ஆதரவு தரக்கூடியவர்களா? என்பதை அறிந்து முடிவு எடுப்போம். தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் தயாராக இருக்கிறோம்.

பா.ஜ.க. மட்டுமல்ல, எந்த அரசாக இருந்தாலும் எதிர்க்க வேண்டிய திட்டங்களை எதிர்ப்போம். மேகதாது விஷயத்தில் மு.க.ஸ்டாலின் எங்களை குற்றம் சாட்டுவது முறையற்றது. கர்நாடக அரசை கண்டித்து அ.தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools