Tamilசெய்திகள்

தேர்தலுக்கு பிறகு விலையை கூட்ட மாட்டோம் என்று பிரதமர் மோடி சொல்வாரா? – ப.சிதம்பரம் கேள்வி

மகளிர் தினத்தை முன்னிட்டு சமையல் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்படும் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். இதனையொட்டி நள்ளிரவு முதல் பிரதமர் மோடி அறிவித்ததன்படி சிலிண்டர் விலை ரூ. 100 குறைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் வரவிருக்கும் நிலையில் சிலிண்டர் விலை ரூ.100 குறைக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், மத்திய முன்னாள் நிதியமைச்சருமான ப.சிதம்பரம் பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தேர்தல் நெருங்க நெருங்க இன்னும் குறைப்பார்கள். அவர் பதவிக்கு வருவதற்கு முன்னதாக பெட்ரோல் ரூ.50. டீசல் ரூ.40 எனக் கூறினார். குறைத்துள்ளனரா?.

ஒவ்வொரு இந்தியனின் வங்கிக் கணக்கில் 15 லட்சம் ரூபாய் போடுவேன் என்றார். போட்டுள்ளனரா?

தேர்தலுக்காக 100 ரூபாய் குறைப்பார்கள். தேர்தல் முடிந்த பிறகு கூட்டமாட்டோம் எனச் சொல்லட்டும். தேர்தலுக்காக குறைக்கிறேன் என்றால்… வேண்டாம் என்று சொல்லல.. மக்களுக்கு பயன். தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சி அமைத்தால் கூட்டமாட்டேன் என்று பிரதமர் மோடி சொலலட்டும்.

இவ்வாறு ப. சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐந்து மாநில தேர்தலையொட்டி கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சிலிண்டர் விலை 200 ரூபாய் குறைக்கப்பட்டது. தற்போது 2-வது முறையாக 100 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.