தேர்தலுக்காக சென்னையில் இருந்து 3,090 கூடுதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்
சட்டசபை தேர்தலை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிக்க வசதியாக சிறப்பு பஸ்களை அரசு போக்குவரத்து கழகங்கள் ஏற்பாடு செய்துள்ளன.
நாளை (1-ந் தேதி) முதல் 5-ந் தேதி வரை சென்னையில் இருந்து தினசரி இயக்க கூடிய 2,225 பஸ்களுடன் சிறப்பு பேருந்துகளாக 3,090 என மொத்தம் 14,215 பஸ்கள் இயக்கப்படுகின்றன.
கோவை, திருப்பூர், சேலம், பெங்களூரு ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,644 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
நாளை முதல் 3-ந் தேதி வரை கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து பஸ்கள் இயக்கப்படுகிறது. 4, 5-ந் தேதி ஆகிய இரண்டு நாட்கள் மாதவரம், கே.கே.நகர், தாம்பரம் பஸ் நிலையங்கள், தாம்பரம் ரெயில் நிலைய பஸ்நிறுத்தம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பஸ் நிலையங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.
இது குறித்து போக்குவரத்து கழக அதிகாரி கூறியதாவது:- தேர்தல் சிறப்பு பஸ் நாளை முதல் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு செய்வதில் பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை. 10 ஆயிரம் பேர் மட்டுமே முன்பதிவு செய்துள்ளனர்.
கொரோனா தடுப்பு வழிமுறைகளை பின்பற்றி பஸ்கள் இயக்கப்படும். கடைசி நேர கூட்ட நெரிசலை தவிர்க்க WWW.tnstc.in.tnstc செயலி மூலமாகவோ, பேருந்து நிலையத்தின் முன்பதிவு மையம் மூலமாகவோ முன்பதிவு செய்யலாம் என்றார்.