தேர்தலில் யார் யார் போட்டியிட முடியாது! – தேர்தல் ஆணையம் விளக்கம்
மத்திய, மாநில அரசு மற்றும் அரசு நிறுவனங்களில் ஆதாயம் பெறும் பதவியில் இருப்பவர்கள் (பிரிவு 10, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951), மனநிலை பாதிக்கப்பட்டவர்களாக இருப்பவர்கள் அல்லது அவ்வாறு ஏதேனும் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டவர்கள் போட்டியிட முடியாது.
திவாலானவர் என்று அறிவிக்கப்பட்டவர்கள், ஏதேனும் வெளிநாட்டு குடியுரிமையை பெற்றவர்கள், பாராளுமன்றத்தால் இயற்றப்பட்ட ஏதேனும் ஒரு சட்டத்தால் தகுதியிழந்தவர்கள், மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951, பிரிவு 8-ன் கீழ் சில குறிப்பிட்ட குற்றங்களுக்காக தண்டனை பெற்றவர்கள் போட்டியிட முடியாது.
இதே போல் ஊழல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு தகுதியிழந்தவர்கள், லஞ்சம் அல்லது அரசுக்கு எதிராக துரோகம் செய்ததால் பதவி நீக்கம் செய்யப்பட்டவர்கள் (பிரிவு 9), வேட்பு மனு தாக்கல் செய்யும் நாளில் அரசுடன் ஒப்பந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள், ஏற்கனவே நடைபெற்ற தேர்தலில் தேர்தல் செலவு கணக்குகளை தாக்கல் செய்ய தவறியவர்கள், வேறு ஏதேனும் குற்றங்களுக்காக 2 வருடங்களுக்கு குறையாமல் சிறைத்தண்டனை அளிக்கப்பட்டவர்கள் வேட்பு மனு தாக்கல் செய்ய தகுதி இல்லாதவர்கள் என்று தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.