X

தேமுதிக தலைவர் விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் சேர்ப்பு

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் நவம்பர் மாதம் 18-ந்தேதி உடல்நலக்குறைவு காரணமாக நந்தம்பாக்கத்தில் உள்ள மியாட் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சில வாரங்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின் பூரண குணமடைந்து வீடு திரும்பி இருந்தார்.

இந்நிலையில், உடல் நலக்குறைவு காரணமாக விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விஜயகாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளது குறித்து தே.மு.தி.க. தலைமை கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், வழக்கமான பரிசோதனைக்காக விஜயகாந்த் மருத்துவமனை அழைத்து வரப்பட்டுள்ளார் எனவும், பரிசோதனை முடிந்து நாளை மறுநாள் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags: tamil news