தேமுதிக அதிமுக கூட்டணியில் இணையும்! – அமைச்சர் கே.பி.அன்பழகன் நம்பிக்கை

தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

தமிழகத்தில் அம்மா வழியில், முதல்-அமைச்சர் மற்றும் துணை-முதல் அமைச்சர் இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.

இதனை கண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்கள், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் அம.மு.க.வில் இருந்து விலகி, மீண்டும் அ.தி.மு.க.வில் தங்களை இணைத்து கொண்டுள்ளனர்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. தலைமையில் பா.ஜ.க., பா.ம.க. ஆகிய கட்சிகளோடு அ.தி.மு.க. மெகா கூட்டணி அமைத்துள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தலை போலவே அ.தி.மு.க. கூட்டணி 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும். கூட்டணி குறித்து இன்னும் ஒரு சில கட்சிகள் அ.தி.மு.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். கூட்டணியை பொருத்தவரை முதல்வரும், துணை முதல்வரும்தான் முடிவு எடுப்பார்கள்.

தமிழகத்தில் மக்களுக்கு நல்லாட்சி தரும் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணிக்கு வரும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools