தேனிலவுக்காக சுவிட்சர்லாந்துக்கு செல்லும் பிரியங்கா சோப்ரா!

இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா தன்னை விட 10 வயது குறைந்தவரான அமெரிக்க பாடகர் நிக் ஜோனசை கடந்த 1-ந் தேதி திருமணம் செய்து கொண்டார்.

இருவரது திருமணம் ஜோத்பூர் அரண்மனையில் நடைபெற்றது. டெல்லியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பிரதமர் மோடி கலந்து கொண்டார்.

பிரியங்கா சோப்ராவும், நிக் ஜோன்சும் தேனிலவுக்காக 28-ந்தேதி சுவிட்சர்லாந்துக்கு செல்கிறார்கள். லேக் ஜெனிவாவில் புத்தாண்டை கொண்டாடுகிறார்கள். ஒரு வாரம் அங்கு இருப்பார்கள் என்று அவர்களுக்கு நெருக்கமான ஒருவர் தெரிவித்துள்ளார்.

2018-ம் ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் திருமணத்தில் பிரியங்கா சோப்ரா, நிக் ஜோன்ஸ் திருமணமும் ஒன்று. தீபிகா, ரன்வீர் சிங் திருமணத்தை விட பிரியங்கா, நிக் ஜோன்ஸ் திருமணம் பற்றி தான் பலரும் இணையத்தில் தேடி உள்ளார்கள்.

திருமணத்திற்கு பிறகும் நடிப்பை தொடரும் பிரியங்கா அமெரிக்காவில் உள்ள பெவர்லி ஹில்ஸ் பகுதியில் கணவருடன் வசிக்க உள்ளார். இந்தி சினிமாவுடன் சேர்த்து ஆலிவுட்டிலும் கவனம் செலுத்துகிறார். பிரியங்காவுக்கு நிறைய குழந்தைகள் பெற்றுக் கொள்ளும் ஆசை உள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools