X

தேசிய விருது வென்ற திரைப்படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

68-வது தேசிய திரைப்பட விழாவில் விருது பெற்ற அனைத்து விருதாளர்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.

இதுதொடர்பாக, முதல்வர் ஸ்டாலின் சமூக வலைதளத்தில் கூறியதாவது: அனைத்து விருதாளர்களுக்கும் வாழ்த்துக்கள். சமூக பொறுப்புணர்வு மிகுந்த படைப்புகள் திரையை ஆளட்டும்.

68-வது தேசிய திரைப்பட விருதுகளை குவித்து தமிழ் திரை உலகிற்கு பெருமை சேர்த்த நடிகர் சூர்யாவிற்கு வாழ்த்துக்கள்.

சூரரைப் போற்று, சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும், மண்டேலா படக்குழுவினருக்கும் வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.