Tamilசினிமா

தேசிய விருது வழங்கும் விழாவில் பங்கேற்கு குடும்பத்துடன் புறப்பட்ட நடிகர் சூர்யா

இந்திய அரசு சார்பில் திரைத்துறை மற்றும் திரைத்துறை கலைஞர்களுக்கு தேசிய விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகின்றன. கடந்த 2020-ஆம் ஆண்டிற்கான 68-வது தேசிய விருது பட்டியல் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

இதில் சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப்போற்று திரைப்படத்திற்கு ஐந்து விருதுகளும், சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கு மூன்று விருதுகளும், மண்டேலா படத்திற்கு 2 விருதுகளும் அறிவிக்கப்பட்டது.

டெல்லியில் இன்று இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தலைமையில் 68-வது தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது.இந்நிலையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் விருது வாங்குவதற்காக டெல்லி சென்றுள்ளார். அது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.