தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டி நவம்பர் 21 ஆம் தேதி சென்னையில் தொடங்குகிறது

90-வது தேசிய பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் போட்டி வருகிற 21-ந்தேி முதல் டிசம்பர் 25-தேதி வரை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடக்கிறது.

35 நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் நாடு முழு வதும் இருந்து 1,500-க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்கிறார்கள். ஆண்கள் மற்றும் பெண்களுக்கான சீனியர் பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர், மாஸ்டர்ஸ் ஸ்னூக்கர், 6 ரெட்ஸ் ஸ்னூக்கர், சப்-ஜூனியர் மற்றும் ஜூனியர் பிரிவில் போட்டிகள் நடைபெறுகிறது.

பங்கஜ் அத்வானி, ஆதித்ய மேத்தா, ரபாத் ஹபீப், வித்யா பிள்ளை, பிரிஜேஷ் தமானி, ஸ்ரீகிருஷ்ணா சூர்ய நாராயணன், அனுபமா ராமச்சந்திரன் உள்ளிட்ட முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். இந்தப் போட்டியின் மொத்த பரிசு தொகை ரூ.10 லட்சமாகும்.

மேற்கண்ட தகவலை தமிழ்நாடு பில்லியர்ட்ஸ் மற்றும் ஸ்னூக்கர் சங்க தலைவர் பி.ஜி.முரளிதரன் தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: tamil sports