தெலுங்கு நடிகர் சங்க தேர்தல் – தோல்வியால் பிரகாஷ்ராஜ் எடுத்த அதிரடி முடிவு

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வி அடைந்துள்ளார். சங்கத்தின் புதிய தலைவராக விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றுள்ளார். தன்னை வெளிநபர் என்றும், தெலுங்கு கலைஞர்களுக்கு மட்டும் ஓட்டுபோடுங்கள் என்றும் பிரசாரம் செய்து தோற்கடித்து விட்டனர் என்று பிரகாஷ்ராஜ் குற்றம் சாட்டி உள்ளார். தனது தெலுங்கு நடிகர் சங்க உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்தார்.

இதுபோல் தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட சில பொறுப்புகளுக்கு போட்டியிட்டு வெற்றி பெற்ற பிரகாஷ்ராஜ் அணியை சேர்ந்த 11 பேர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தனர். இந்த நிலையில் தெலுங்கு நடிகர் சங்கத்துக்கு போட்டியாக புதிய நடிகர் சங்கத்தை தொடங்கும் முயற்சியில் பிரகாஷ்ராஜ் ஈடுபட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதுகுறித்து பிரகாஷ்ராஜ் கூறும்போது, “என் பக்கம் நின்ற அன்பார்ந்த நடிகர் சங்க உறுப்பினர்களை கைவிடமாட்டோம். விரைவில் உங்களுக்கு விளக்கம் தருகிறோம்” என்றார். தேர்தலில் மோகன்பாபு அடியாட்களுடன் உறுப்பினர்களை அடித்து அச்சுறுத்தினார். எனவே தேர்தல் காணொலி பதிவுகளை தன்னிடம் வழங்க வேண்டும் என்று தேர்தல் அதிகாரிக்கு பிரகாஷ்ராஜ் கடிதம் எழுதி உள்ளார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools