Tamilசினிமா

தெலுங்கு நடிகர்களுக்கு அதிர்ச்சியளித்த தயாரிப்பாளர்கள் சங்கம்

தெலுங்கு தயாரிப்பாளர்கள் சங்கம் சமீபத்தில் தயாரிப்புச் செலவுகள் உயர்ந்து வருவதைக் கட்டுப்படுத்துவது, நடிகர்களின் சம்பளம், திரையரங்க டிக்கெட் கட்டணம், விபிஎப் கட்டணம், ஓடிடி-யில் படங்களை வெளியிடுவது உள்ளிட்ட பிரச்சனைகள் குறித்து பேசி முடிவு செய்தபின், படப்பிடிப்புகளைத் தொடர முடிவு செய்தது.

இந்நிலையில் தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், இனிவரும் காலங்களில் நடிகர்களுக்கும், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் நாள் சம்பளம் கிடையாது என்றும், நடிகர்களின் ஊதியத்தில் அவர்களுக்கான பணியாளர்கள், பயண செலவு, தங்குமிடம், சிறப்பு உணவுகள் ஆகியவை அடங்கும்.

மேற்சொன்னவைகளுக்காக தயாரிப்பாளர்கள் தரப்பில் கூடுதலாக செலவு செய்ய முடியாது. தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் இது பொருந்தும் என்றும் பல விஷயங்களை குறிப்பிட்டு அறிக்கை ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது.