பிரபல தெலுங்கு முன்னணி இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தளபதி 66 என தற்காலிகமாக பெயர் வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 6ம் தேதி இதன் படப்பிடிப்பு துவங்கியது. இதில் நாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்க, தமன் இசை அமைக்கிறார். இப்படம் ஒரே நேரத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராகிறது.
இத்திரைப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தெலுங்கானா முதல்-மந்திரி சந்திரசேகர் ராவை, நடிகர் விஜய் நேற்று நேரில் சந்தித்தார்.
ஐதராபாத்தில் தளபதி 66 படத்தின் ஷூட்டிங் நடந்து வரும் நிலையில், மரியாதை நிமித்தமாக இந்த சந்திப்பு நடைபெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.