தெலுங்கானா கவர்னராக 8 ஆம் தேதி பதவி ஏற்கும் தமிழிசை சவுந்தராஜன்
தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனை, தெலுங்கானா மாநில கவர்னராக நியமித்து ஜனாதிபதி ஆணை பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து தலைவர் பதவி மற்றும் பா.ஜ.க.வின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்தும் தமிழிசை சவுந்தரராஜன் விலகினார்.
இந்தநிலையில் வருகிற 8-ந்தேதி, தெலுங்கானா மாநில கவர்னராக டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்கிறார். ஐதராபாத்தில் உள்ள ராஜ்பவனில் அன்றைய தினம் காலை 11 மணிக்கு பதவி ஏற்பு விழா நடக்கிறது. தெலுங்கானா மாநில ஐகோர்ட்டு தலைமை நீதிபதி ராக்வேந்திரா எஸ்.சவுகான், டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜனுக்கு கவர்னராக பதவி பிரமாணம் செய்து வைக்கிறார்.