தெலுங்கானாவில் பா.ஜ.க ஆட்சிக்கு வந்தால் ‘கரீம் நகர்’ பெயர் மாற்றப்படும் – யோகி ஆதித்யநாத்

தெலுங்கானா மாநிலத்தில் ஆட்சியை பிடிப்பதற்காக உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை பாரதீய ஜனதா கட்சி பிரசாரத்தில் களம் இறக்கியது.

நேற்று அவர் கரீம் நகரில் தனது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரசாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர், “மாநிலத்தில் பாரதீய ஜனதா ஆட்சிக்கு வந்தால் கரீம் நகரின் பெயர் கரிபுரம் என மாற்றப்படும், உங்கள் உணர்வுகள் மதிக்கப்படும்” என கூறினார்.

யோகி ஆதித்யநாத், கடந்த 2-ந் தேதி ஐதராபாத்தில் பிரசாரம் செய்தபோது, ‘‘ஐதராபாத்தின் பெயரை பாக்ய நகர் என மாற்ற வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், பாரதீய ஜனதா கட்சியை ஆட்சி செய்வதற்கு தேர்ந்தெடுங்கள்’’ என்று அழைப்பு விடுத்தது நினைவுகூரத்தக்கது.

தெலுங்கானா மாநில பாரதீய ஜனதா கட்சி தலைவர் டி.ராஜாசிங் லோத், பாரதீய ஜனதா கட்சி ஆட்சியைப் பிடித்தால் அந்த மாநிலத்தில் உள்ள பல நகரங்களின் பெயர்கள், தலைவர்களின் பெயர்களைக் கொண்டு மாற்றப்படும் என கூறியது குறிப்பிடத்தக்கது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news