தெற்கு ரயில்வேவுக்கு 3 விருதுகள்!

இந்தியா முழுவதும் எரிபொருள் சேமிப்பதில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை பல்வேறு பிரிவின் கீழ் எரிபொருள் சேமிப்பு அமைப்பு கணக்கிட்டு வருகிறது. இதில் சிறந்து விளங்கும் துறைக்கு ஆண்டுக்கு ஒருமுறை விருதுகளையும் வழங்கி வருகிறது.

அந்த வகையில் கடந்த 2018-19 ஆண்டுக்கான எரிபொருள் சேமிப்பதில் தேசிய அளவில் தெற்கு ரெயில்வே பல்வேறு விருதுகளை பெற்றுள்ளது. தேசிய அளவில், மின்சார சேமிப்பில் சிறந்து விளங்கியதற்காக, மின்னணு துறை பிரிவில் தெற்கு ரெயில்வே 3 விருதுகளையும், போக்குவரத்து துறை மண்டல பிரிவில் தெற்கு ரெயில்வே தலைமையகம் விருது பெற்றுள்ளது.

மேலும் ரெயில்வே பள்ளி பிரிவில், ஈரோடு ரெயில்வே பள்ளி தேசிய அளவில் முதல் இடத்தை பிடித்துள்ளது. இதற்கான விருதுகளை டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய இணை மந்திரி ஆர்.கே.சிங் வழங்கினார். மேற்கண்ட தகவல் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: south news