Tamilசினிமா

தெரு நாய்களை பராமரிக்கும் நடிகை ஹன்சிகா

நடிகைகள் பலருக்கும் நாய்குட்டிகள் என்றால் பிரியமாக இருப்பார்கள். ஆனால் தெரு நாய்களிடமும் அவர்கள் அதே அன்பை செலுத்துவர்களா என்றால் அது சந்தேகம்தான். திரிஷா, வரலட்சுமி போன்ற சிலரே தெரு நாய்கள் மீதும் பாசம் காட்டுவார்கள். ஆனால் நடிகை ஹன்சிகாவோ தெருநாய்களுக்கு உணவளித்து ஆச்சர்யப்படுத்தி இருக்கிறார்.

இதுகுறித்து இன்ஸ்டாவில் வீடியோ பதிவிட்டுள்ள அவர் கூறியிருப்பதாவது, ”கிறிஸ்துமஸ் கிட்டத்தட்ட நெருங்கி வந்துவிட்டது, நாம் அனைவரும் நம் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கொண்டாடும்போது, தெருக்களில் உள்ள நமது நண்பர்களை மறந்து விடக்கூடாது.

நாம் கிறிஸ்துமஸ் தாத்தாவின் கரங்களைப்போல் தெருநாய்களின் பசியை உணவளித்து தீர்க்கவேண்டும், தினசரி நம்மால் முடிந்த சத்தான உணவை தெருநாய்களுக்கு அளித்து உதவி செய்வோம்” என கூறியுள்ளார்.