தெலுங்கு மொழிகளில் மிகவும் பிரபலமாக இருப்பவர் ராஷ்மிகா. இவர் தனது வீட்டின் அருகே உள்ள நான்கைந்து தெருக்களுக்கு தினமும் செல்கிறார். உடன் உணவுகளுடன் அவரது உதவியாளர்களும் செல்கிறார்கள். தெருக்களில் சுற்றி திரியும் நாய்களுக்கு ராஷ்மிகா உணவு கொடுக்கிறார்.
இது பற்றி அவர் சொல்லும்போது, ‘இந்த ஊரடங்கு சமயத்தில் வாயில்லாத ஜீவன்கள் அதிக சிரமம் படுகிறார்கள். அதை அவர்களால் சொல்ல முடியாது. நாம் தான் புரிந்து கொள்ள வேண்டும். நாய்களுக்கு உணவும் நீரும் கொடுங்கள். பூனைகளுக்கும் சோறு போடுங்கள்’ என்கிறார்.