மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அதிகாரி கூறியதாவது:-
மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணிநேரத்துக்கு தமிழகத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். நீலகிரி, சேலம், கோவை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையை பொறுத்த வரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யும். கடந்த 24 மணிநேரத்தில் ஏற்காட்டில் 11 செ.மீ, கொடைக்கானலில் 6 செ.மீ மழை பெய்துள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.