தென் கொரியாவுக்கு சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு

இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக தென்கொரியா சென்றார். தென்கொரிய தலைநகர் சியோல் சென்ற பிரதமர் மோடிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் சியோல் நகரில் உள்ள லாட்டி ஓட்டலில், அவரை இந்திய வம்சாவளியினர் உற்சாகமாக வரவேற்றனர்.

தென்கொரிய அதிபர் மூன் ஜே இன் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி, அந்நாட்டுக்கு சென்றுள்ளார். பிரதமர் மோடியின் 2-வது தென்கொரிய சுற்றுப்பயணம் இதுவாகும். பிரதமர் மோடியின் இந்த சுற்றுப்பயணத்தின் போது, இருநாடுகளுக்கு இடையேயான நல்லுறவை மேலும் வலுப்படுத்துவது உள்பட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

முன்னதாக, தென்கொரியா புறப்படும் முன் பிரதமர் மோடி தனது டுவிட்டரில் இந்த பயணம் பற்றி வெளியிட்ட பதிவில், “மேக் இன் இந்தியா உள்ளிட்ட இந்தியாவின் முக்கிய முன்னெடுப்பு திட்டங்களில், தென்கொரியா முக்கிய கூட்டாளியாக திகழ்கிறது. இரு ஜனநாயக நாடுகளும் பிராந்திய மற்றும் சர்வதேச அமைதி ஆகிய விவகாரங்களில் மதிப்பு மிக்க கொள்கைகளையும் தொலைநோக்கு பார்வையையும் கொண்டுள்ளது” என தெரிவித்தார்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools