Tamilவிளையாட்டு

தென் ஆப்பிரிக்க ரசிகர்களின் கோஷத்தை ஏற்க தயாராக இருக்கிறோம் – லாங்கர்

பந்தை சேதப்படுத்திய சம்பவத்திற்குப் பிறகு ஆஸ்திரேலியா முதன்முறையாக தென்ஆப்பிரிக்கா செல்கிறது. இதனால் வார்னர் மற்றும் ஸ்மித்திற்கு எதிராக அங்குள்ள ரசிகர்கள் கோபத்தை வெளிப்படுத்த வாய்ப்புள்ளது.

தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் என்ன செய்தாலும் அதை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம் என ஆஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து ஜஸ்டின் லாங்கர் கூறுகையில் ”நாங்கள் தென்ஆப்பிரிக்காவுக்கு செல்வதை விரும்புகிறோம். நாங்கள் நல்ல விதமான நினைவுகளை பெற்றுள்ளோம். கடந்த முறை எங்களுக்கு மிகவும் கடினமான தொடராக அமைந்தது. தற்போது அதில் இருந்து எங்களுடைய அணி வீரர்கள் கடந்து, ஆஸ்திரேலியா கிரிக்கெட் எங்கே இருக்கிறது என்பதை மதிப்பீடு செய்ய நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

எப்படியும் தென்ஆப்பிரிக்கா ரசிகர்கள் கோசம் எழுப்புவார்கள். அதை நாங்கள் எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *