இங்கிலாந்து அணி 3 ஒருநாள் போட்டியில் விளையாடுவதற்காக தென் ஆப்பிரிக்கா சென்றுள்ளது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் 2 ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது. இரு அணிகளுக்கும் இடையேயான 2-வது ஒருநாள் போட்டி இன்று மாலை 4.30 மணிக்கு தொடங்குகிறது.
இந்நிலையில் 2-வது ஒருநாள் போட்டியின் போது பவுமா விக்கெட்டை கொண்டாடியதற்காக சாம் கரணுக்கு அபராதம் விதிக்கப்பட்டது 28-வது ஓவரில் தென்னாப்பிரிக்கா கேப்டனை போல்ட் முறையில் அவுட் செய்த பிறகு டெம்பா பவுமாவின் அருகில் சென்று சாம் கரண் ரொம்ப ஆக்ரோஷமாக கொண்டாடினார்.
இதனால் ஐசிசியின் நடத்தை விதிகளை மீறியதற்காக சாம் கரணுக்கு அவரது போட்டி கட்டணத்தில் 15 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அபராதத்துடன் கூடுதலாக, அவரது ஒழுங்குமுறை பதிவில் ஒரு குறைபாடு புள்ளி சேர்க்கப்பட்டுள்ளது.
24 மாத காலத்தில் கரணின் முதல் குற்றம் இதுவாகும். கள நடுவர்கள் மரைஸ் எராஸ்மஸ் மற்றும் அட்ரியன் ஹோல்ட்ஸ்டாக், மூன்றாவது நடுவர் பொங்கனி ஜெலே மற்றும் நான்காவது நடுவர் அல்லாஹுதின் பலேகர் ஆகியோரால் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. ஒரு வீரர் 24 மாத காலத்திற்குள் நான்கு குறைபாடு புள்ளிகளைப் பெற்றால், அவர்கள் தடையைப் பெறுவார்கள்.