தென் ஆப்பிரிக்கா டி20 லீக் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்கியது

தென்ஆப்பிரிக்காவில் ‘எஸ்.ஏ.20’ கிரிக்கெட் லீக் போட்டி கடந்த ஆண்டு அறிமுகம் ஆனது. ஐ.பி.எல். பாணியில் நடத்தப்படும் இந்த போட்டியின் முதலாவது சீசனில் சன்ரைசர்ஸ் ஈஸ்டன் கேப் அணி சாம்பியன் கோப்பையை கைப்பற்றியது.

இந்த நிலையில் 2-வது எஸ்.ஏ 20 ஓவர் லீக் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்கி அடுத்த மாதம் 10-ந்தேதி வரை நடக்கிறது. இதில் ஜோபர்க் சூப்பர் கிங்ஸ், சன் ரைசர்ஸ் ஈஸ்டன் கேப், டர்பன் சூப்பர் ஜெயன்ட்ஸ், எம்.ஐ. கேப்டவுன், பார்ல் ராயல்ஸ், பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் ஆகிய 6 அணிகள் பங்கேற்கின்றன.

கெபேஹாவில் இன்று நடக்கும் தொடக்க ஆட்டத்தில் பாப் டு பிளிஸ்சிஸ் தலைமையிலான ஜோபர்க் சூப்பர் கிங்ஸ் அணி, எய்டன் மார்க்ரம் தலைமையிலான ஈஸ்டன் கேப் அணியை எதிர்கொள்கிறது. இந்திய நேரப்படி இரவு 9 மணிக்கு தொடங்கும் இந்த போட்டியை ஸ்போர்ட்ஸ்18 சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools