தென் ஆப்பிரிக்கா, இந்தியா இடையிலான ஒருநாள் தொடர் தள்ளி வைப்பு
மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடுவதற்காக தென்ஆப்பிரிக்கா அணி இந்தியா வந்துள்ளது. முதல் போட்டி நேற்று இமாச்சல பிரதேசத்தில் நடைபெற இருந்தது. மழையால் போட்டி கைவிடப்பட்டது.
2-வது போட்டி லக்னோவில் 15-ந்தேதியும், 3-வது மற்றும் கடைசி போட்டி கொல்கத்தாவில் 18-ந்தேதியும் நடைபெற இருந்தது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக போட்டியை ரசிகர்கள் யாரும் இல்லாமல் பூட்டிய மைதானத்திற்குள் நடத்த வேண்டும் என்று மத்திய அரசு வலியுறுத்தியுள்ளது. ஆனால் மாநில அரசுகள் பொதுமக்கள் அதிகமாக கூடும் நிகழ்ச்சிகளை பாதுகாப்பு காரணத்திற்காக ரத்து செய்து வருகிறது.
இன்று லக்னோ வந்த இந்திய வீரர்கள் முகக்கவசம் அணிந்து வந்தனர். டெல்லி அரசு ஐபிஎல் போட்டிக்கு அனுமதி அளிக்காது என்று கூறியிருந்தது. இதனால் ஐபிஎல் போட்டியை ஏப்ரல் 15-ந்தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெருக்கடி அதிகமாவதை உணர்ந்த பிசிசிஐ இந்தியா – தென்ஆப்பிரிக்கா இடையிலான எஞ்சிய இரண்டு போட்டிகளையும் ரத்து செய்வதாக அறிவித்துள்ளது.