X

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா முதல் நாளில் 8/208

இந்திய அணி தென் ஆப்பிரிக்காவில் பயணம் செய்து விளையாடி வருகிறது. டி20 மற்றும் ஒருநாள் தொடர் முடிந்துள்ள நிலையில், 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் தொடர் நேற்று ஆரம்பமானது. இரு அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் பவுமா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி, இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர்கள் ரோகித் 5 ரன், ஜெய்ஸ்வால் 17 ரன், சுப்மன் கில் 2 ரன் எடுத்து ஆட்டமிழந்தனர். ஓரளவு ஆடிய விராட் 38 ரன், ஸ்ரேயாஸ் 31 ரன், ஷர்துல் 24 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி 59 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 208 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை பெய்ததால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

கே.எல்.ராகுல் 70 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். அத்துடன் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. தென் ஆப்பிரிக்கா சார்பில் ரபாடா 5 விக்கெட்டும், பர்கர் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

Tags: tamil sports