தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததற்கு அஸ்வின் தான் காரணம் – கவாஸ்கர் கருத்து

பெர்த்தில் நடைபெற்ற தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியை தழுவியது. ஒரு கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா 10 ஓவரில் 40 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் மார்கிராம், மில்லர் ஆகியோர் சிறப்பாக விளையாடி இந்தியாவின் வாய்ப்பை தட்டிப் பறித்தனர். இதில் மார்கிராம் இரண்டு மூன்று முறை அவுட்டாவதில் இருந்து தப்பினார்.

அஸ்வின் ஓவரில் விராட் கோலி எளிதாக பிடிக்கக் கூடிய கேட்சை நழுவவிட்டார். அதேபோல் ரோகித் சர்மா இரண்டு முறை ரன்அவுட் செய்யும் வாய்ப்பை தவறவிட்டார். தோல்விக்கு இதுதான் முக்கிய காரணம் என ரசிகர்கள் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். ரோகித் சர்மாவும் இதை ஏற்றுக் கொண்டார்.

ஆனால் ஒரு பந்து வீச்சாளர் 43 ரன்கள் விட்டுக் கொடுத்ததுதான் முக்கிய காரணம் என்று கூறி கவாஸ்கர் அஸ்வினை மறைமுகமாக தாக்கியுள்ளார். இதுகுறித்து கவாஸ்கர் கூறுகையில் ”கேட்சை நழுவ விடுவது, ரன்-அவுட் வாய்ப்பை மிஸ் செய்வது போன்ற விஷயங்கள் கிரிக்கெட்டில் நடக்கக் கூடியதுதான். நாம் எந்தவொரு வீரரையும் தோல்விக்காக குற்றம் சுமத்த முடியாது. அதிர்ஷ்டம் உங்களுடைய பக்கம் இல்லாதபோது, பெரிய வீரர்களும் கேட்ச் பிடிக்க தவறுவார்கள். ரன்அவுட் மிஸ் செய்வார்கள்.

இந்திய பந்து வீச்சின்போது ஒரு வீரர் 43 ரன்கள் விட்டுக்கொடுத்தது முக்கிய பிரச்சினை என்று நம்புகிறேன். சாஹல் நெதர்லாந்து அணிக்கெதிராக விளையாட வேண்டும் என்று நம்புகிறேன். இது அடுத்த போட்டிக்கான நம்பிக்கையை அவருக்கு அளிக்கும்” என்றார்.

இந்திய அணியில் புவி 3.4 ஓவர்கள் வீசி 21 ரன்களும், அர்ஷ்தீப் சிங் 4 ஓவர்கள் வீசி 25 ரன்களும், முகமது சமி 4 ஓவர்கள் வீசி 13 ரன்களும், ஹர்திக் பாண்ட்யா ௪ ஓவர்கள் வீசி 29 ரன்களும் விட்டுக் கொடுத்தனர்.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools