X

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 3 டி20 போட்டிகளில் வெற்றி பெற்ற இங்கிலாந்து

தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் 3 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. 2 போட்டியின் முடிவில் இங்கிலாந்து வெற்றி பெற்றது.

இந்நிலையில் 3-வது ஆட்டம் கேப் டவுனில் நடைபெற்றது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்கா முதலில் பேட்டிங் செய்தது.

டி காக் 17, பவுமா 32 , ஹென்ரிக்ஸ் 13 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து இறங்கிய டு பிளசிஸ், வான் டெர் டுசன் பொறுப்புடன் ஆடி விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டனர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

இறுதியில் தென் ஆப்பிரிக்கா 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுக்கு 191 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து, 192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இங்கிலாந்து களமிறங்கியது. ஜேசன் ராய் 16 ரன்னில் வெளியேறினார்.

ஜோஸ் பட்லரும், தாவித் மலானும் அதிரடியாக ஆடினர். இருவரும் அரை சதமடித்து அசத்தினர்.

இறுதியில், இங்கிலாந்து 17.4 ஓவரில் ஒரு விக்கெட்டுக்கு 192 ரன்கள் அடித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. பட்லர் 67 ரன்னும், மலான் 47 பந்தில் 99 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

இந்த வெற்றியின் மூலம் இங்கிலாந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றியது. ஆட்டநாயகன் மற்றும் தொடர் நாயகன் விருதை தாவித் மலான் வென்றார்.