தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் – முதல் ஆட்டத்தில் இங்கிலாந்து 9/262
தென்ஆப்பிரிக்கா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப் டவுனில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
அதன்படி, இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் கிராலி 4 ரன்னில் வெளியேறி அதிர்ச்சி அளித்தார்.
அடுத்து இறங்கிய வீரர்கள் நிதானமாக ஆடினர். ஆனாலும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் வீழ்ந்தன.
இங்கிலாந்தின் பென் ஸ்டோஸ் 47 ரன்னும், ஜோ டென்லி 38 ரன்னும், ஜோ ரூட் 35 ரன்னும், சிப்லே 34 ரன்னும் எடுத்து அவுட்டாகினர். ஆலி போப் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து அரை சதமடித்தார்.
முதல் நாள் ஆட்ட நேர இறுதியில் இங்கிலாந்து அணி 89 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 262 ரன்கள் எடுத்துள்ளது. ஆலி போப் 56 ரன்னுடன் களத்தில் உள்ளார்.
தென்ஆப்பிரிக்கா சார்பில் பிளெண்டர், ரபாடா, நோர்ஜே, பிரிடோரியச் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.