தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது இந்தியா

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையில் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்றுடன் முடிவடைந்த புனே டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் வெற்றி பெற்றது. இதன்மூலம் 2-0 எனத் தொடரை கைப்பற்றியது.

இந்தத் தொடரை வென்றதன் மூலம் சொந்த மண்ணில் தொடர்ச்சியாக அதிக தொடர்களை வென்ற அணி என்ற சாதனையை இந்தியா படைத்துள்ளது. 2013 பிப்ரவரி முதல் 2019 அக்டோபர் வரை இந்தியா தொடர்ச்சியாக 11 தொடர்களை வென்று சாதனைப் படைத்துள்ளது.

இதற்கு முன் ஆஸ்திரேலியா 1994 நவம்பர் முதல் 2000 நவம்பர் வரை தொடர்ச்சியாக 10 தொடர்களையும், 2004 ஜூலை முதல் 2008 நவம்பர் வரை 10 தொடர்களையும் வென்றிருந்தது. தற்போது ஆஸ்திரேலியாவை பின்னுக்குத் தள்ளி இந்தியா முதல் இடத்தை பிடித்துள்ளது.

FacebookFacebookTwitterTwitterWhatsAppWhatsAppCopy LinkCopy LinkShareShare
AddThis Website Tools
Tags: sports news