தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்ட் – இந்தியா பேட்டிங்
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி டி20 மற்றும் டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் டி20 தொடர் 1-1 என சமநிலையில் முடிந்தது. இதையடுத்து 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது.
முதல் டெஸ்ட் போட்டி விசாகப்பட்டினம் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி மைதானத்தில் இன்று காலை தொடங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. இந்திய அணியைப் பொருத்தவரை வெஸ்ட் இண்டீஸ் தொடரில் களம் இறக்கப்படாத அஸ்வினுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. விக்கெட் கீப்பராக செயல்பட்டு வந்த ரிஷப் பந்த் நீக்கப்பட்டு விருத்திமான் சகா சேர்க்கப்பட்டுள்ளார்.
தென் ஆப்பிடிக்க அணியில் சுழற்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் செனரன் முத்துசாமி அறிமுகம் செய்யப்பட்டுள்ளார். இடதுகை பந்துவீச்சாளரான இவர், 69 முதல் தர போட்டிகளில் விளையாடி, 129 விக்கெட் வீழ்த்தியதுடன், பேட்டிங்கில் 7 சதம் அடித்துள்ளார்.
இந்திய அணி: ரோகித் சர்மா, மயங்க் அகர்வால், புஜாரா, கோலி, ரகானே, ஹனுமா விகாரி, சகா, அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, இஷாந்த் சர்மா, முகமது ஷமி.
தென் ஆப்பிரிக்கா: எய்டன் மார்க்ராம், டீன் எல்கர், தியூனிஸ் டி புரூயின், டு பிளசிஸ், டெம்பா பவுமா, குயின்டன் டி காக், வெரோன் பிலாண்டர், செனரன் முத்துசாமி, கேஷவ் மகராஜ், ரபாடா, டேன் பீட்.